மெர்சல்' வசனங்களுக்கு சர்ச்சை வரும் என்று எனக்கு முன்பே தெரியும்: விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல வார இதழ் ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை தளபதி விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த விருதினை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. உலக நாயகன் கமல்ஹாசன், சிறந்த நடிகருக்கான விருதை விஜய்க்கு வழங்கி, 'தம்பி விஜய் இன்னும் பல விருதுகளை பெறுவார் என்று வாழ்த்தினார். கமல்ஹாசனிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட விஜய் இந்த விழாவில் பேசியவதாவது:
தமிழர்கள் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளில் இந்த விருது கிடைத்ததில் ஒரு தமிழனா நான் பெருமைப்படுகிறேன். சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால், பல பிரச்சனைகளை சந்தித்த மெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். இப்படத்தில், நான் பேசிய வசங்களுக்கு சர்ச்சைகள் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். அவசியம் கருதி தான் நான் 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். இப்படத்தில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு விஜய் இந்த விழாவில் பேசினார்
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி உள்பட ஒருசில வசனங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments