மெர்சல்' வசனங்களுக்கு சர்ச்சை வரும் என்று எனக்கு முன்பே தெரியும்: விஜய்

  • IndiaGlitz, [Sunday,January 14 2018]

பிரபல வார இதழ் ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை தளபதி விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த விருதினை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. உலக நாயகன் கமல்ஹாசன், சிறந்த நடிகருக்கான விருதை விஜய்க்கு வழங்கி, 'தம்பி விஜய் இன்னும் பல விருதுகளை பெறுவார் என்று வாழ்த்தினார். கமல்ஹாசனிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்ட விஜய் இந்த விழாவில் பேசியவதாவது:

தமிழர்கள் கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளில் இந்த விருது கிடைத்ததில் ஒரு தமிழனா நான் பெருமைப்படுகிறேன். சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால், பல பிரச்சனைகளை சந்தித்த மெர்சல் படத்திற்கு ஆதரவளித்த அனைத்து உள்ளங்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள். இப்படத்தில், நான் பேசிய வசங்களுக்கு சர்ச்சைகள் வரும் என்று எனக்கு முன்பே தெரியும். அவசியம் கருதி தான் நான் 'மெர்சல்' படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன். இப்படத்தில் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு விஜய் இந்த விழாவில் பேசினார்

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி உள்பட ஒருசில வசனங்கள் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அரசியல் குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

அரசியல் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.

பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் அவசியம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த ஆதார் அட்டை எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க வேண்டும்

ஜூன் மாதம் சசிகலாவுடன் சுற்றுப்பயணம் செய்வேன்: நடராஜன் அதிர்ச்சி தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை வகித்து வருகிறார்.

பெண்களும் மது விற்கலாம், வாங்கலாம்: 38 ஆண்டுகால தடையை நீக்கியது இலங்கை

38 ஆண்டு காலமாக இலங்கையில் மது வாங்கவும், விற்பனை செய்யவும் பெண்களுக்கு இருந்த தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

Mr.சந்திரமெளலி ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடும் மூன்று பிரபலங்கள்

கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் Mr.சந்திரமெளலி படத்தை பிரபல இயக்குனர் திரு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.