அனிதா குடும்பத்திற்கு விஜய் கொடுத்த வாக்குறுதி

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

சமீபத்தில் நிகழ்ந்த மிகத்துயரமான சம்பவமான அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவிக்கு தான் விரும்பிய மெடிக்கல் படிப்பை படிக்க இடமில்லை என்பது மறுக்கப்பட்ட சமூக நீதியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அனிதாவின் மரணத்தை வைத்து ஒருசிலர் அரசியல் செய்து வருவது அவரது மரணத்தை விட கொடுமையான ஒன்று. அனிதா வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிப்பதால் அரசியல் லாபம் பெறலாம் என்கிற அரசியல்வாதிகள் மத்தியில் எந்தவித உள்ளர்த்தமும் இன்றி மனிதாபிமான நோக்கத்திற்காக மட்டுமே அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தவர்களில் ஒருவர் தளபதி விஜய்

அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி 'எந்த நேரத்திலும் தன்னை அணுகி எந்தவித உதவியையும் கேட்கலாம் என்று அனிதா குடும்பத்தினர்களிடம் வாக்குறுதி அளித்தும் வந்துள்ளார். இந்த மனிதாபிமானம் தான் அவர் பல கோடிக்கணக்கான உள்ளங்களில் குடியிருக்க ஒரு காரணமாக உள்ளது மட்டுமின்றி அவர் தளபதி என்ற பெயருக்கும் பொருத்தமாக காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.