இன்று மாலை 6 மணிக்கு 'மெர்சல்' ஆடிவெள்ளி கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

ஆடிமாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தமிழர்கள் புனிதமான நாளாக கருதி வரும் நிலையில் அந்த நாள் இன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நல்ல நாளில் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு நல்ல செய்தியை இன்று மாலை வெளியிட இருப்பதாக 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 'மெர்சல்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூகவலைத்தளத்தில், 'மெர்சல் ஆடிவெள்ளி அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு' என்ற தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியானதில் இருந்து மாலை 6 மணியை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தினை பெரும் பொருட்செலவில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் இந்நிறுவனத்தின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரசியலுக்கு தீபா ஆசைப்படும்போது, கமல் ஆசைப்படக்கூடாதா? நல்லக்கண்ணு

கமல்ஹாசன் அவருண்டு, அவருடைய உயிர் மூச்சான சினிமா உண்டு என்று இருந்த நிலையில் அவரை தேவையில்லாமல் ஒருசில அரசியல்வாதிகள் சீண்டிவிட்டதால் தற்போது விஸ்வரூபம் எடுத்து ஆட்சியாளர்களின் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார்...

எல்லாமே ஸ்கிரிப்ட் படிதான் உள்ளே நடக்குது! பிக்பாஸ் உண்மையை பிட்டு வைத்த கஞ்சாகருப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்த முதல் நாளே சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி உண்மையான ரியாலிட்டி ஷோ இல்லை, இதுவொரு ஸ்கிரிப்ட் எழுதப்பட்ட சீரியல் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறினர். நாள் ஆக ஆக இது உண்மையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது...

தரை லோக்கலாக இறங்கிய காயத்ரி. தராதரத்துடன் ஒதுங்கிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒருவாரம் மட்டுமே டீசண்டாக இருந்த காயத்ரி அதன்பின்னர் அவருடைய சுயரூபம் வெளிப்படும் வகையில் நடந்து கொண்டு அனைவரின் வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறார்...

தனுஷின் 'விஐபி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்...

தல அஜித்தின் விவேகம்: கபிலன் வைரமுத்துவின் 'காதலாடா' பாடல் வரிகள்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தில் இடம்பெற்ற 'சர்வைவா' மற்றும் 'தலை விடுதலை' ஆகிய பாடல்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளிவந்து அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது...