'மாஸ்டர்' விநியோகிஸ்தருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: கைகொடுத்து உதவிய தளபதி

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருவதால் இந்த படம் வரும் தீபாவளி அன்று தான் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் உலக அளவிலான ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லலித், படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பைனான்சியருக்கு அதிக வட்டி செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

இதனை அறிந்த தளபதி விஜய் தயாரிப்பாளர் லலித்தின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவருடைய நிறுவனத்திற்கு இன்னொரு படம் நடித்துத் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் கேட்டு கொண்டதால்தான் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவில்லை என்பதும், தனக்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட லலித்துக்கு தளபதி விஜய் கைகொடுத்து உதவியுள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அனேகமாக சன் பிக்சர்ஸ்-ஏஆர் முருகதாஸ் படத்தை அடுத்து லலித் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது