ஷிமோகாவில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கிய தளபதி விஜய்!

  • IndiaGlitz, [Sunday,December 15 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் படப்பிடிப்பு குறித்து கேள்விப்பட்ட கர்நாடக விஜய் ரசிகர்கள் ஷிமோகா சிறை முன் ஆயிரக்கணக்கில் தினமும் கூடி வருவதும் அவர் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னும் நூற்றுக்கணக்கானோர் கூடி வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் படப்பிடிப்பில் இருந்து வெளியே வரும்போதும் ரசிகர்களுக்கு என சில நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு கை காட்டி கொண்டு செல்வதை விஜய் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதே போல் தான் தங்கியிருக்கும் ஹோட்டலில் முன் காத்திருக்கும் ரசிகர்களையும் பார்க்க ஒரு சில நிமிடங்கள் அவர் ஒதுக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் படப்பிடிப்பு வைத்தால் தான் ரசிகர்களின் அன்பு தொல்லை என்று பார்த்தால் கர்நாடக மாநிலத்திலும் தமிழகத்துக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் அவரது படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் இருந்து வருவது அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

More News

அதிரடி ஆக்சன் கேரக்டரில் 'பிக்பாஸ் 3' நடிகை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் திரையுலக வாய்ப்பை பெற்று வந்த நிலையில்

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் மலைக்க வைக்கும் ரன்னிங் டைம்!

ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள் மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் வெளிவந்து கொண்டிருந்தன. ஐந்து பாடல்கள், காமெடிக்கு என தனி டிராக் இல்லாத படங்களே இல்லை

மருந்துகளின் விலையை 50 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளலாம்..! தேசிய மருந்து பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி.

பெருமளவில் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாட்டிக் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ள, தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது

எங்க ஊரையே காணும் சார்..! ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தையே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்கொலை செய்த கணவன், துக்கம் தாளாமல் குழந்தையை கொன்று தானும் இறந்த மனைவி..!

டெல்லியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.