புலியுடன் மோதிய 'மெர்சல்' விஜய்யின் துணிச்சல்

  • IndiaGlitz, [Tuesday,August 22 2017]

கோலிவுட் திரையுலகில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் என்னதான் அழுத்தமான கதை, திரைக்கதை இருந்தாலும் ஹிரோக்கள் ரிஸ்க் எடுத்து நடித்தால் தான் படம் வெற்றி பெறும் என்பது சமீபத்திய வெற்றிப்படங்கள் நிரூபித்துள்ளன. குறிப்பாக அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் பெரும்பாலும் டூப் போடாமல் ரிஸ்க்கான காட்சிகளில் அவர்களே நடித்து வருகின்றனர்
அந்த வகையில் தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் ரிஸ்க்கான காட்சி ஒன்றில் விஜய் துணிச்சலாக நடித்து படக்குழுவினர்களின் பாராட்டை பெற்றுள்ளாராம்
'மெர்சல்' படத்தில் மேஜிக்மேனாக நடித்திருக்கும் விஜய் கேரக்டரின் அறிமுகக்காட்சியே புலியுடன் கட்டி உருண்டு சண்டை போடும் காட்சியாம். பெரும்பாலான ஹாலிவுட் படங்களிலேயே தற்போது கிராபிக்ஸ் புலிகள் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வரும் நிலையில் 'மெர்சல்' குழுவினர் உண்மையான புலியை பயன்படுத்தியுள்ளார்களாம். விஜய்யும் டூப் இல்லாமல் உண்மையான புலியுடன் கட்டிப்பிடித்து உருண்டு நடித்துள்ளார்.
'அடிமைப்பெண்' படத்தில் எம்ஜிஆர் ஒரிஜினல் சிங்கத்துடன் மோதுவது போன்று, புலியுடன் விஜய் மோதிய காட்சி இருந்ததாக படக்குழுவினர் கூறுகின்றனர். இந்த காட்சி திரையில் தோன்றும்போது நிச்சயம் ஒரு மாஸ் காட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.