'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் 'மதயானைக்கூட்டம்' இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தமானார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த டைட்டிலை பார்த்ததும் நடிகர் சாந்தனுக்கு தளபதி விஜய் மெசேஜ் அனுப்பியுள்ளார். 'வாழ்த்துக்கள் நண்பா! டைட்டில் செம! என்று விஜய் வாழ்த்தியுள்ளதாகவும், இந்த ஒரே ஒரு டெக்ஸ்ட் மெசேஜ் தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்ததாகவும் நடிகர் சாந்தனு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் வாழ்த்தால் மெர்சலான நடிகர் சாந்தனு அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.