தளபதி is the Goat, என்னது ? தோனி கேமியோ ரோல் பண்ணிருக்காரா ?
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர். சென்னை 600028, சரோஜா,பிரியாணி, கோவா, மங்காத்தா மற்றும் மாநாடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர்.
நடிகர் அஜித்தோடு கைகோர்த்து மங்காத்தா என்ற வெற்றித் திரைப்படைத்தையும், நடிகர் சிம்புவோடு இணைந்து மாநாடு என்ற சக்ஸஸ் படத்தையும் கொடுத்தவர்.
இவர் பிரபல இசை அமைப்பாளர், பாடகர், இயக்குநர் என்ற பன்முகம் கொண்ட கங்கை அமரனின் மூத்த மகன் ஆவார்.
தற்போது இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கியுள்ள GOAT திரைப்படம் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது. திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அவர் திரைப்படம் குறித்தும், விஜய் குறித்தும் பகிர்ந்துள்ள பல ஸ்வாரஷ்யமான தவகல்களை இந்த பேட்டியில் காணலாம்.
" இந்த படத்தில விஜய் சார் பண்ணாத விஷயத்தை பண்ண வைக்கணும் அப்டிங்குறதுல நான் ரொம்ப தீர்மானமா இருந்தேன். அவரும் என்ன நம்பினார். எல்லா பந்துலயும் அவர் சிக்ஸர் அடிச்சிருக்கார்னுதான் சொல்லணும்.
அவரை பொறுத்தவரைக்கும் எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்தி படுத்தனும் னு நினைப்பவர். அதுல ரொம்ப தெளிவா இருப்பார். எனக்குமே, இதுவரை யாரும் பார்க்காத விஜய் சார இந்த படத்துல காட்டணும்னு முயற்சி பண்ணிருக்கேன். நீங்க எல்லாம் படம் பாருங்க, நீங்களே சொல்லுவீங்க.
சிறு வயது விஜயை திரையில் பார்க்க நானுமே ஆவலோடு இருக்கிறேன். பெரும் பொருட் செலவில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு AGS நிறுவனத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். விஜய் சாருக்கு எல்லா அப்டேட்டும் அப்பப்ப கொடுத்துடுவேன். அவரு பார்த்துட்டு எல்லா நல்லா இருக்குனு சொல்லிட்டார். முதலில் அவரை திருப்திப்படுத்தவேண்டும் என்பதில் நான் உறுதியா இருந்தேன்.
முழுக்க முழுக்க இது ஒரு வர்த்தக ரீதியான படம். எல்லாவிதமான ரசிகர்களையும் உள்ளடக்கிதான் நான் இந்த படத்தை இயக்கிருக்கேன்.
இந்த படத்தோட தயாரிப்பாளர் அகோரம் Brothers க்கு நன்றி சொல்லணும். அவர்கள் மிகவும் இனிமையானவர்கள். கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் சந்தோசம் அடைந்தார்கள்.
என இந்த பேட்டியில் GOAT திரைப்படம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com