'தளபதி 63' படப்பிடிப்பு எப்போது முடியும்? புதிய தகவல்

  • IndiaGlitz, [Monday,February 04 2019]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் இவ்வாண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பை 180 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே ஜனவரி 20ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையுடன் நிறைவடையும் என தெரிகிறது.

'வில்லு' படத்திற்கு பின் விஜய், நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

 

More News

த்ரிஷாவின் அடுத்த படத்தின் இயக்குனர்-தயாரிப்பாளர் குறித்த தகவல்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் மிகப்பெரிய புகழை பெற்று தந்தது.

விஷாலின் 'அயோக்யா' டிரைலர் ரிலீஸ் தேதி!

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

தனுஷின் 'அசுரன்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

தனுஷ் நடித்த 'வடசென்னை' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு

உதயநிதியின் அடுத்த பட நாயகி குறித்த தகவல்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு

33 வருடங்களுக்கு முன் மேஸ்ட்ரோவுடன்: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 'திரைக்கொண்டாடம்' நிகழ்ச்சியில் பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.