'தளபதி 62' படத்தின் முதல்-முக்கிய பணி ஆரம்பம்

  • IndiaGlitz, [Wednesday,January 03 2018]

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இன்று சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் விஜய்யின் கெட்டப் குறித்த டெஸ்ட் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வித்தியாசமான கெட்டப் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விபரங்கள் வெகுவிரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அதனையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 3வது வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

அரசியல் எண்ட்ரி குறித்த ராகவா லாரன்ஸ் முடிவில் திடீர் மாற்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்,

ரஜினி கட்சியில் சேருவது ஏன்? ராஜூ மகாலிங்கம் விளக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுவதற்காக லைகா நிறுவனத்தின் கிரியேட்டிங் ஹெட் பதவியில் இருந்து ராஜூ மகாலிங்கம் விலகியுள்ளார் என்று வெளியான செய்தியை சற்றுமுன் பார்த்தோம்

பதவியில் இருந்து திடீரென விலகி ரஜினி கட்சியில் சேரும் பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அவருடைய கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ஆலய விசிட்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இருவரும் இணைந்து பிறந்த நாள் உள்பட பல்வேறு நாட்களில் ஜோடியாக பல இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

'AAA படக்குழு பாணியில் குற்றம் சாட்டியுள்ள பலூன் இயக்குனர்

கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் 'AAA' திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பத்திரிகையாளர்களை சந்தித்து சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.