close
Choose your channels

ராகுல் காந்திக்கு திடீரென வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. என்னமோ திட்டம் இருக்குது..!

Wednesday, June 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவர் நேரடியாக களத்தில் இறங்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்டால் அது ரிஸ்க் என்பதால் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தன்னுடைய கொள்கைக்கு ஒத்து வரும் கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைத்து போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி உள்பட ஒரு சில கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதை அடுத்து அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த நாட்டிற்கு சேவை செய்ய அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த வாழ்த்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், விஜய் மனதில் எதோ திட்டம் இருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment