close
Choose your channels

பிரபல பாடலாசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தளபதி விஜய்

Monday, April 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும், பட்டிதொட்டியெங்கும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி இந்த பாடலை தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் ரசித்தார்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் என்பதும் அவருக்கு கோலிவுட் திரையுலகினர் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய், பாடலாசிரியர் விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவேக் கூறியதாவது: விஜய் அவர்களிடம் இருந்து ஒரு ஆச்சரியமான வாழ்த்து இன்று கிடைத்தது. என்ன ஒரு இனிமையானவர் அவர். அவருடைய இனிய வாழ்த்தால் நெகிழ்ந்து போனேன். என்னுடைய இந்த ஆண்டு பிறந்த நாள் உண்மையிலேயே ஒரு ஸ்பெஷல் தான்' என்று கூறியுள்ளார். தளபதி விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் இருந்து விவேக் மீண்டு வர இன்னும் ஒருசில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment