ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Sunday,September 15 2024]

இன்று கேரளாவில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஓணம் பண்டிகைக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறிய நிலையில் ஒரு பக்கம் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் மற்ற பண்டிகைக்கு வாழ்த்து ஏன் கூறவில்லை என்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.

தளபதி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, தமிழர் பண்டிகையான தமிழ் புத்தாண்டு உள்ளிட்டவைகளுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் அண்டை மாநிலத்தில் கொண்டாடும் ஒரு பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் வயநாடு பாதிப்பிற்கு நிதி கொடுக்காத விஜய் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதா என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத விஜய்க்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய்க்கு அவரது கேர ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

'தளபதி 69' கதையை கமல் மட்டுமல்ல.. வேறு யாருக்கெல்லாம் எச் வினோத் சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடிக்கும் 69 வது திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் அனிருத்

நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் முக்கிய தகவலை

துபாயில் நயன்தாராவின் உயிர்கள்.. க்யூட் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது குடும்பத்துடன் துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் தனது இரண்டு மகன்களின் புகைப்படத்தை பதிவு செய்து எனது உயிர்கள் என்று குறிப்பிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி.

20 வயது இளம்பெண் போல் நடிகை நதியா.. சுவிட்சர்லாந்து சுற்றுப்பயண சூப்பர் புகைப்படங்கள்..!

நடிகை நதியா தற்போது 57 வயதில் இருக்கும் நிலையில் அவர் 20 வயது இளம்பெண் போல் சுவிட்சர்லாந்து நாட்டில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள

கணவருடன் பீச்சில் பிரியங்கா சோப்ரா.. கால் வைக்க வேறு இடமே இல்லையா? குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பீச்சில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தில் ஒன்றில்