ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று கேரளாவில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் ஓணம் பண்டிகைக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறிய நிலையில் ஒரு பக்கம் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் மற்ற பண்டிகைக்கு வாழ்த்து ஏன் கூறவில்லை என்ற விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
தளபதி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, தமிழர் பண்டிகையான தமிழ் புத்தாண்டு உள்ளிட்டவைகளுக்கு வாழ்த்து சொல்லாத விஜய் அண்டை மாநிலத்தில் கொண்டாடும் ஒரு பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மேலும் வயநாடு பாதிப்பிற்கு நிதி கொடுக்காத விஜய் ஓணம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதா என்ற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத விஜய்க்கு ஒரு பக்கம் கண்டனங்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்ன விஜய்க்கு அவரது கேர ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த #ஓணம் நல்வாழ்த்துகள்!
— TVK Vijay (@tvkvijayhq) September 15, 2024
എന്റെ സ്വന്തം മലയാളി സുഹൃത്തുക്കൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.#HappyOnam!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com