ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து பாடுபடுவோம்: தவெக விஜய் சுதந்திர தின பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,August 15 2024]

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தளபதி சமூக வலைதளத்தில் 78வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்து செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று இந்தியா முழுவதும் 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் சுதந்திர தின வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:

சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்ந்து எந்நாளும் போற்றுவோம்.

என்றென்றும் பாடுபடுவோம்’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.