ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த விஜய்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்து மீம்ஸ்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு பதவிகளில் உள்ளவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில் இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.
இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு அறிவித்திருந்தோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கை கள் மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.
இருப்பினும் நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தெரியப்படுத்தி கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் உள்ள ட்ரெய்லரில் ஒரு சில காட்சிகளில் சர்ச்சைக்குரிய வகையில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவு செய்ததால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy @actorvijay Sir @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/zuw6SOq8qZ
— Bussy Anand (@BussyAnand) April 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments