'வாரிசு' இசை வெளியிட்டு விழா.. போலீசார் காயமடைந்ததால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை தடுத்து நிறுத்திய போலீசார் காயம் அடைந்துள்ளதாகவும் இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'வாரிசு’ இசை வெளியீட்டில் கலந்து கொள்ள விஜய் மக்கள் மன்றத்திலிருந்து பாஸ் வழங்கப்பட்டு இருந்த நிலையில் இந்த பாஸ் 4000 முதல் 7000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் இருந்த நிலையில் அனுமதி சீட்டு இல்லாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே சென்றதால் ஒருசில போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேரு விளையாட்டரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Varisu audio launch:
— Blue Sattai Maran (@tamiltalkies) December 24, 2022
Policemen injured by Vijay fans at the entrance of Nehru Indoor Stadium. pic.twitter.com/mKQdOODNTl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments