தளபதி விஜய் இப்போது எங்கே இருக்கின்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

தளபதி விஜய் சமீபத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்ற நிலையில் தற்போது லண்டனில் இருந்து அவர் குடும்பத்துடன் சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சீனாவில் விஜய் தனது குடும்பத்துடன் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னர் ஜனவரி 12ஆம் தேதி அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு பொங்கல் முடிந்தவுடன் ஆரம்பமாகும் என்றும் இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பிசியாக இருக்கின்றார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இம்மாதம் தொடங்கும் 'தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று இவ்வருட தீபாவளிக்கு இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த வருட தீபாவளிக்கு அஜித், விஜய், சுர்யா ஆகிய மூன்று முன்னணி நடிகர்களின் படங்களும் வெளிவர வாய்ப்புள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.