தளபதி விஜய் அறிவித்த 3 முக்கிய அறிவிப்புகள்: ரசிகர்கள் மகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தரப்பில் இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று உள்ளனர்.
தளபதி விஜய் தனது பெயரில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும், இந்த அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள் சிலர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை இன்று காணொளி மூலம் விஜய் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 'தளபதி விஜய் குருதியகம்' என்ற ரத்ததான செயலி தொடங்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரபூர்வ யூடியூப் சேனல் மற்றும் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களும் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை பனையூரில் நடந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த தொடக்கவிழா நடந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்றது
விஜய்யின் பெயரில் ரத்ததான செயலி, யூடியூப் சேனல், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கம் ஆகிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com