'தளபதி 68' படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

தளபதி விஜய் தற்போது ’லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் விரைவில் அரசியலில் குதிப்பார் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த இலையில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது விஜய் முழுமையாக அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசியலில் ஈடுபடுவதற்காக வெங்கட் பிரபு படத்தை முடித்தவுடன் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலக விஜய் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிப்பதை சிறிது காலம் நிறுத்தி விட்டு அரசியல் களப்பணியில் விஜய் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் தீவிர அரசியலுக்கு களமிறங்கள்ளதாக கூறப்படுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.