close
Choose your channels

'தளபதி 69' குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 'கோட்' படத்திற்கு ஜாக்பாட் அடித்ததா?

Saturday, June 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கோட்’ மற்றும் அடுத்து நடிக்க இருக்கும் ’தளபதி 69’ ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘கோட்’ படத்தை அடுத்து ’தளபதி 69’ படம் அவருடைய கடைசி படம் என்பதால் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் வசூல் சாதனை செய்யும் என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி முதல் முதலாக விஜய் மற்றும் எச் வினோத் இணைய இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்து கொண்டிருக்கும் தகவலின்படி விஜய் ’தளபதி 69’ படத்தை டிராப் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் ‘கோட்’ படம் தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் இன்னும் முழுமையாக இரண்டு வருடம் கூட தேர்தலுக்கு கால அவகாசம் இல்லை. இந்த நிலையில் ’தளபதி 69’ படத்திற்காக ஒரு வருடம் செலவு செய்து விட்டு அதன் பின் அரசியல் பணிகளை ஆரம்பிக்க கால அவகாசம் இருக்காது என்றும் எனவே தற்போதே அரசியல் பணியை ஆரம்பித்தால் தான் 2026 தேர்தலுக்கு தயாராக முடியும் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ‘கோட்’ படம் தான் விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில் அந்த படத்திற்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்றும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஜாக்பாட் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ’தளபதி 69’ படம் டிராப் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment