10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா எப்போது? தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் மூன்று இடம் கிடைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசளித்தார் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதேபோன்ற பாராட்டு விழா நடைபெற திட்டமிட்டு உள்ள நிலையில் தற்போது இது குறித்த தேதி மற்றும் இடம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 'தளபதி விஜய் அவர்கள் 2024 ஆம் ஆண்டு நடந்து நடந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பாராட்டு பெறுகிறார்கள்.
தளபதி விஜய் அவர்கள் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்களும் ஊக்க தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @BussyAnand @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/SJ2CrkzGWU
— Thalapathy Vijay Makkal Iyakkham (@TVMIoffl) June 10, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments