நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. தமிழக அரசுக்கு ஆதரவு.. ஒன்றிய அரசு என பேச்சு.. அனல் பறந்த விஜய்யின் பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவது மற்றும் மாநில அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பது ஆகியவை பேசி உள்ளதை அடுத்து அவர் ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பது தெரிய வருகிறது
கடந்து சில நாட்களுக்கு முன் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்ற போது, ‘தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை என்றும் தமிழகத்தில் போதை பழக்க வழக்கம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து அவர் பேசியுள்ளார். நீட் தேர்வால் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கிறார்கள் என்றும், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும், கல்வி எப்போது மத்திய அரசு பொது பட்டியிலிருந்து சென்றதோ அப்போது முதல் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விஜய் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டம் இருக்கும் நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர் பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் தேர்வை எப்படி எல்லோராலும் எழுத முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீட் தேர்வு குளறுபடி அந்த தேர்வு மீதான நம்பகத்தன்மை இல்லாமல் செய்து விட்டது என்றும் நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்து கொண்ட விஷயம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ போன்ற நிறுவனங்களில் வேண்டுமானால் நீட் தேர்வை நடத்திக் கொள்ளட்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் நீட் தேர்வு விலக்கு தேவை என்ற தமிழக அரசின் பரிந்துரையை நான் ஆதரிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கும் போது மாணவர்கள் எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இந்த உலகம் மிகப்பெரியது, அதில் நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது, ஒரு சின்ன விஷயத்தில் தோற்றால் அத்துடன் முடங்கி விடாதீர்கள், தோல்வி கண்டால் கடவுள் இன்னும் நிறைய வாய்ப்புகளை உங்களுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற அர்த்தம், அது என்ன என்பதை கண்டுபிடிங்கள், நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம்’ என்றும் விஜய் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout