'கோட்' படத்திலும் தொடர்கிறது தளபதி விஜய்யின் முக்கிய பணி.. உறுதி செய்த பிரபலம்..!
- IndiaGlitz, [Sunday,March 10 2024]
தளபதி விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி தான் நடிக்கும் திரைப்படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது பாடி வருவதை கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உறுதி செய்துள்ளார்.
தளபதி விஜய் முதல் முறையாக ’ரசிகன்’ என்ற திரைப்படத்தில் பாடலை பாடிய நிலையில் அதன் பிறகு அவர் நடித்த பல படங்களில் பாடல்களை பாடி வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் ’பிகில்’ ’மாஸ்டர்’ ’பீஸ்ட்’ ’வாரிசு’ ’லியோ’ என அவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்திலிருந்து ஒரு முழு பாடலை பாடியுள்ளதாக நேற்று பெங்களூரில் நடந்த விழா ஒன்றில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ’புதிய கீதை’ படத்திற்கு பின்னர் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் பாடியுள்ளதாக யுவன் சங்கர் ராஜா உறுதி செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பாடிய பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...