'அவசரப்பட்டு சொல்லிட்டேனே'.. வெங்கட்பிரபுவிடம் வருத்தப்பட்டாரா விஜய்?

  • IndiaGlitz, [Monday,August 05 2024]

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ படத்தை முழுமையாக பார்த்த தளபதி விஜய் ’அவசரப்பட்டு சொல்லிட்டேனே’ என்று அவரிடம் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவான ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தை விஜய் சமீபத்தில் பார்த்ததாகவும் படம் பார்த்து முடித்ததும் வெங்கட் பிரபுவிடம் ‘கலக்கிட்டீங்க, அவசரப்பட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டேன், இன்னொரு படம் உங்க கூட பண்ணியிருக்கலாம்’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் டீஏஜிங் டெக்னாலஜி குறித்த சில நெகட்டிவ் கமெண்ட்கள் வருவதை அடுத்து அந்த காட்சிகளை மீண்டும் சரி செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் ‘கோட்’ படம் அட்டகாசமான விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டது என்றும், வித்தியாசமான விஜய் கெட்டப் ஆகியவை இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள் என்றும் கண்டிப்பாக இந்த படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய வசூலை கொடுத்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க

எனது அடுத்த படம் முற்றிலும் வேறுபட்டது.. சூரியின் எமோஷனல் பதிவு..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்ந்துள்ள சூரி தற்போது பிஸியான நடிகராக இருந்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'விடுதலை', 'கருடன்'

'தளபதி 69' படத்தின் நாயகி 23 வயது இளம் நடிகையா?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 69' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' சீரிஸின்,

ஆடிப்பெருக்கில் மோகன் ஜியின் புதிய திரைப்படம்.. மீண்டும் அவர் தான் ஹீரோ..!

இன்றைய ஆடிப்பெருக்கு தினத்தில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பூஜை நடந்ததை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.