'வேட்டையன்' FDFS பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வேட்டையன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.

முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ் திரை உலக சேர்ந்த பல பிரபலங்கள் இன்று திரையரங்குகளில் சென்று ’வேட்டையன்’ படத்தை பார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய், சென்னை தேவி தியேட்டரில் ’வேட்டையன்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு அவர் வெளியே வந்து காரில் ஏறும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் மிகவும் அரிதாகவே தியேட்டரில் வந்து படம் பார்ப்பார் என்றும், அவருடைய படத்தை பார்க்க கூட அவர் வருவதில்லை என்ற நிலையில் ரஜினியின் ’வேட்டையன்’ படத்தை பார்க்க வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தனுஷ் உள்பட பல பிரபலங்கள் இன்று திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

More News

ஏன்டா எங்க செல்லத்தை டென்ஷன் ஆக்குறீங்க.. பிக்பாஸ் செளந்தர்யா ஆர்மி ஆவேசம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சௌந்தர்யா தான் வெளியேறுவார் என்று சக போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அனைத்து போட்டிகளையும்

தசரா பண்டிகை கொண்டாட்டம்.. 'வேதா' திரைப்படத்தை பிரீமியர் செய்கிறது ZEE5..!

நிகில் அத்வானி இயக்கத்தில்,  ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள 'வேதா, சம்விதன் கா ரக்ஷக்' படத்தில், ஜான் ஆபிரகாம்,

ரத்தன் டாடா தயாரித்த ஒரே திரைப்படம்.. ஹீரோ யார் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ரத்தன் டாடா நேற்று காலமான நிலையில், அவருக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

'வாழை' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' உட்பட சில தமிழ் படங்களும் மற்ற மொழி படங்களும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளன.

இந்த வாரம் எலிமினேஷன் யார்? போட்டியாளர்களின் கணிப்பு இதுதான்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இன்று நான்காவது நாளாக நடைபெறும் நிலையில், இன்றைய முதல் புரோமாவில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து