close
Choose your channels

எச் வினோத் உடன் 'இந்தியன் 2' படம் பார்த்த விஜய்.. இதுதான் காரணமாக இருக்குமோ?

Sunday, July 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தை தளபதி விஜய், இயக்குனர் எச் வினோத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தை பார்த்ததற்கு ஒரு முக்கிய காரணமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் ’இந்தியன் 2’ படத்தின் பிரத்யேக காட்சியை விஜய் பார்த்ததாகவும் அவருடன் 'தளபதி 69’ படத்தின் இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’தளபதி 69’ திரைப்படம் ஒரு அரசியல் சார்ந்த கதை அம்சம் கொண்டது என்பதால் ’இந்தியன் 2’ படத்தை இருவரும் பார்த்ததாகவும் ’இந்தியன் 2’ படத்தில் செய்த தவறை நாமும் செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த படத்தை இருவரும் பார்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக ’தளபதி 69’ திரைப்படத்தில் தமிழ்நாட்டு அரசியலை கூற வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி ரன்னிங் டைம் குறைவாக இருக்க வேண்டும் என்றும் இந்த படத்தை பார்த்த பின் இருவருக்கும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ திரைப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மெகா ஹிட் ஆகும் வகையில் படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment