எச் வினோத் உடன் 'இந்தியன் 2' படம் பார்த்த விஜய்.. இதுதான் காரணமாக இருக்குமோ?

  • IndiaGlitz, [Sunday,July 21 2024]

கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படத்தை தளபதி விஜய், இயக்குனர் எச் வினோத்துடன் பார்த்ததாக கூறப்படுகிறது. அவர் இந்த படத்தை பார்த்ததற்கு ஒரு முக்கிய காரணமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் ’இந்தியன் 2’ படத்தின் பிரத்யேக காட்சியை விஜய் பார்த்ததாகவும் அவருடன் 'தளபதி 69’ படத்தின் இயக்குனர் எச் வினோத் இந்த படத்தை பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

’தளபதி 69’ திரைப்படம் ஒரு அரசியல் சார்ந்த கதை அம்சம் கொண்டது என்பதால் ’இந்தியன் 2’ படத்தை இருவரும் பார்த்ததாகவும் ’இந்தியன் 2’ படத்தில் செய்த தவறை நாமும் செய்து விடக்கூடாது என்பதற்காக இந்த படத்தை இருவரும் பார்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக ’தளபதி 69’ திரைப்படத்தில் தமிழ்நாட்டு அரசியலை கூற வேண்டும் என்றும் அது மட்டும் இன்றி ரன்னிங் டைம் குறைவாக இருக்க வேண்டும் என்றும் இந்த படத்தை பார்த்த பின் இருவருக்கும் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

’தளபதி 69’ திரைப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மெகா ஹிட் ஆகும் வகையில் படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

More News

விஜய்யின் 'கோட்' ரிலீஸ் தினத்தில் விஷால் படம்.. தளபதி - புரட்சி தளபதி மோதலா?]

விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியில் வேறு எந்த படமும் வெளியாக வாய்ப்பில்லை எ

'ரகு தாத்தா' படத்தின் கதை இதுதான்.. இசை வெளியீட்டு விழாவில் ஓப்பனாக கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த 'ரகு தாத்தா' என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

நான் இல்லாம அந்த கேஸை எப்படி சால்வ் பண்ணுவீங்க.. த்ரிஷாவின் 'பிருந்தா' டிரைலர்..!

நடிகை த்ரிஷா நடித்த 'பிருந்தா' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பட குழந்தை நட்சத்திரம். 20 ஆண்டுகளுக்கு பின் ஸ்காட்லாந்தில் பட்டம்..!

விக்ரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை தற்போது ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

'டீன்ஸ்' படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா? விமர்சகர்களை கேள்வி கேட்கும் பார்த்திபன் நண்பர்..!

சமீபத்தில் பார்த்திபன் நடித்த 'டீன்ஸ்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கும் சில நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின.