ரோல்ஸ்ராய் காரை ஓட்டிய தளபதி விஜய்: காரில் யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் 'பீஸ்ட்’ படக்குழுவினருடன் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்லும் வீடியோ நேற்று முதல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் ஓட்ட, அவருக்கு பின்னால் இயக்குனர் நெல்சன், நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உட்பட 'பீஸ்ட்’ படக்குழுவினர் ஜாலியாக பேசிக் கொண்டே செல்கின்றனர். இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.