சென்னை திரும்பினார் தளபதி விஜய்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வந்தோம். விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கடந்த சில நாட்களாக ஸ்டண்ட் காட்சிகள், டூயட் பாடல் காட்சிகள் உள்பட பல்வேறு முக்கிய காட்சிகளை ஜார்ஜியாவில் உள்ள பல முக்கிய இடங்களில் படமாக்கினார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் ’தளபதி 65’ திரைப்படத்தின் ஜார்ஜியா படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக செய்திகள் வெளியானது. இந்த படத்தின் உதவி இயக்குனர்கள் உள்பட படக்குழுவினர் பலர் நேற்று ஜார்ஜியாவில் கடைசி நாளில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்
இந்த நிலையில் சற்று முன் சமூக வலைதளங்களில் சென்னை விமான நிலையத்தில் தளபதி விஜய் திரும்பிய காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தளபதி விஜய் சென்னை திரும்பிவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது
இந்த நிலையில் படப்பிடிப்புக்கு தொடர்ந்து அனுமதி கிடைத்தால் மே மாதம் இரண்டாவது வாரம் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அந்த படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே கலந்துகொள்வார் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது,
Thalapathy VIJAY landed in Chennai today early morning back from Georgia ❤️ #Master #Thalapathy65 @actorvijay pic.twitter.com/54CGVa4tdm
— Master Dinesh (@63dinesh64) April 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments