கேரளாவில் இன்று முதல் தளபதி விஜய்யின் செல்பி கிடையாது.. காரணம் இதுதான்..!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தினமும் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பதும் தெரிந்தது. ஆனால் இன்று முதல் அந்த செல்பி இருக்காது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து விஜய் உள்பட படக்குழுவினர் திருவனந்தபுரம் சென்றனர் என்பது தெரிந்தது.

திருவனந்தபுரத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தினமும் அவர் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார், ரசிகர் கொடுத்த மாலை வாங்கி போட்டுக் கொண்டார், மாற்றுத்திறனாளி ரசிகருடன் ஆறுதலாக பேசினார் உள்பட பல விஷயங்கள் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடந்த ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்த நிலையில் விஜய் சென்னை திரும்பி விட்டார். அதனால் தான் இனி திருவனந்தபுரத்தில் இன்று முதல் செல்பி எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

 

More News

'தக்லைஃப்' படத்தில் இருந்து விலகல்: அடுத்த சில நிமிடங்களில் பிரபல நடிகரின் முக்கிய அறிவிப்பு..!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து ஜெயம் ரவி விலக இருப்பதாக செய்தி வெளியான சில நிமிடங்களில் ஜெயம் ரவி நடிக்கும்

துல்கர் சல்மானை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்திலிருந்து சமீபத்தில் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரும்

'எதிர்நீச்சல்' தொடரில் இருந்து விலக போகிறாரா 'ஆதிரை' சத்யா? புதிய அறிவிப்பால் பரபரப்பு..!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'எதிர்நீச்சல்' சீரியலில் ஆதிரை என்ற கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜன் என்பவர் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

ஜோடியாக சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்ற லோகேஷ் - ஸ்ருதிஹாசன் .. வைரல் புகைப்படம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியை பார்க்க பல திரையுலக நட்சத்திரங்கள் வந்திருந்தார்கள்

நான் வேட்பாளர் ஆனது எனக்கே தெரியாது: கடலூரில் போட்டியிடும் தங்கர்பச்சான் பேட்டி..!

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் அதில் கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுவதாக