சென்னை திரும்பிய தளபதி விஜய்.. தாய்லாந்து படப்பிடிப்பில் நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Monday,November 13 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சில ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நேற்று திடீரென தளபதி விஜய் சென்னை திரும்பி உள்ளார். அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து தாய்லாந்து படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையில் தான் நடைபெற இருப்பதாகவும் இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் வீட்டில் 2 பிரபலங்கள் திடீர் விசிட்.. வைல்ட்கார்ட் போட்டியாளர்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று திடீரென இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காட்சிகள் முதல் ப்ரோமோவில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிக்சனை கேள்வியே கேட்கவில்லை... கமல் மீது ஏமாற்றம் அடைந்த எவிக்சன் ஆன போட்டியாளர்..!

நிக்சன் தன்னை மோசமான முறையில் விமர்சனம் செய்த நிலையில் அது குறித்து கமல்ஹாசன் வார இறுதியில் கேட்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்த எபிசோடு தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததாகவும்

ரெண்டு பேருமே ஒத்துக்கிட்டாங்க.. அப்ப அட்லியின் அடுத்த படம் ரூ.2000 கோடி வசூலா?

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை பார்த்தோம்.

நான் வேற மாதிரி பேசுவேன்.. மாயாவிடம் திடீரென கோபப்பட்ட கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடு பரபரப்பாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாயா

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நயன்தாரா.. இணையத்தில் வைரல்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.