'மாஸ்டர்' படம் பார்த்தவுடன் தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ் உள்பட பலர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார் என்பதும் இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீசாக திட்டமிடப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அனேகமாக இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஓடிடியில் நிச்சயமாக வெளியே வராது என்பதில் விஜய் மற்றும் தயாரிப்பாளர் உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய்க்காக பிரத்தியேகமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டதாகவும் படத்தை பார்த்து முழு திருப்தி அடைந்த விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியது மட்டுமின்றி கூடுதல் போனசாக மீண்டும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ்க்கு தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அனேகமாக ’தளபதி 66’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com