விஷால் படத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்.. இன்று செம விருந்து..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

விஷால் நடிக்கும் படத்தை புரமோஷன் செய்ய விஜய் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ’மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த டீசரை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட ஒப்புக் கொண்டுள்ளதாக சில நாட்களாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளதை அடுத்து விஷால் படத்தை விஜய் புரமோஷன் செய்ய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் விஷால் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி, ரிதுவர்மா, உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

More News

துணி போட்டு உக்காருடின்னு சில்க் ஸ்மிதாவை திட்டுவேன் - சுலக்சனா

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, சூரிலாம் அனாதையா சினிமாவுக்கு வந்தவங்க.. - இளவரசு

தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் இளவரசு என்பதும் இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார்

நடிகராக பிஸியாகும் ராஜீவ் மேனன்.. அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமா?

தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் நடித்திருந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து

மாதவன் - நயன்தாராவின் 'தி டெஸ்ட்' படத்தின் முக்கிய அறிவிப்பு.. படப்பிடிப்பு எப்போது?

முதல் முறையாக மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் 'தி டெஸ்ட்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடத்தில்

'லியோ' LCU படமா? இல்லையா? என்பது எனக்கு தெரியும், ஆனால்..: த்ரிஷா

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்