பெரியார் நினைவு தினத்தில் தளபதி விஜய் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தந்தை பெரியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு திராவிட கட்சிகளின் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பெரியார் நினைவு நாள் குறித்த பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பெரியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அவருடைய பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கை தலைவர் தந்தை பெரியார் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை… pic.twitter.com/5bDhtzaH1y
— TVK Vijay (@tvkvijayhq) December 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments