பெரியார் நினைவு தினத்தில் தளபதி விஜய் செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,December 24 2024]

தந்தை பெரியார் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு திராவிட கட்சிகளின் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பெரியார் நினைவு நாள் குறித்த பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தனது சமூக வலைத்தளத்தில் பெரியாருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. அவருடைய பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கை தலைவர் தந்தை பெரியார் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.

More News

ஜாதகத்தில் பூர்வ ஜென்ம கர்மா என்றால் என்ன? அதை எவ்வாறு அறிவது? அது நீங்க என்ன செய்ய வேண்டும்?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், நம் வாழ்வில் ஏற்படும் நல்லது கெட்டது எல்லாம் பூர்வ ஜென்ம கர்மங்களால் தீர்மானிக்கப்படுவதாகக் கூறுகிறார்.

எனது பாணியில் தனித்துவமான கதை: 'கேம் சேஞ்சர்' குறித்து இயக்குனர் ஷங்கர்...!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

'வாடிவாசல்' படத்தில் எனக்கும் ஒரு முக்கிய கேரக்டர்.. பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் தனக்கு ஒரு முக்கிய கரெக்டர் இருப்பதாக இயக்குனர் தமிழ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சரத்குமாரின் 150வது படம் தி ஸ்மைல் மேன் : பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் 150 வது சிறப்பு திரைப்படமாக

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்: சோசியல் மீடியா பதிவுகளுக்கு அல்லு அர்ஜுன் எச்சரிக்கை..!

போலியான பெயர்களில் சமூக வலைதளங்களில் கணக்குகள் தொடங்கி அவதூறான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.