மாநில மாநாடு, மண்டல மாநாடு, பொதுக்கூட்டங்கள், நடைப்பயணம்.. களத்தில் இறங்குகிறார் விஜய்..!

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அரசியல் கட்சி தொடங்கியது முதல் இப்போது வரை அவர் ட்விட்டரில் மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது அவர் அரசியல் களத்தில் முழுமையாக இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும் இந்த மாநாடு திருச்சியில் செப்டம்பர் அல்லது நவம்பரில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாநில மாநாடு முடிந்தவுடன் 4 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக் கூட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நடை பயணத்தின் போது விஜய் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு செய்த அடுத்த நாளே கட்சி கொடியை அறிமுகம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களை எல்லாம் பார்க்கும்போது தளபதி விஜய் முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

More News

கண்ட கண்ட படத்தை எடுப்பதற்கு பதில் இந்த படத்தின் 2ஆம் பாகம் எடுங்கள்.. இயக்குனர் மோகன் ஜி

கண்ட கண்ட கதை எல்லாம் படம் எடுக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுங்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் வீட்டில் முக்கிய விசேஷம்.. உறவினர்கள் வருகை.. நெகிழ்ச்சியான வீடியோ..!

நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் முக்கிய விசேஷம் நடந்துள்ள நிலையில் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ள அவருடைய உறவினர்கள் வருகை தந்தனர். இது குறித்த நெகிழ்ச்சியான வீடியோவை அவர் பதிவு செய்துள்ள

'டீன்ஸ்' படத்திற்கு கூட்டமே இல்லை.. நான் ஆனந்தத் தாண்டவம் ஆடப் போவதும் இல்லை.. பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்த 'டீன்ஸ்' என்ற திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்து வருகிறது என்பதும் படத்தின் வசூலும் திருப்திகரமாக

எங்கே விட்டோமோ அங்கே இருந்துதான் ஆரம்பிப்போம்.. வெங்கட் பிரபு வெளியிட்ட சவால்.. வீடியோ வைரல்..!

இயக்குனர் வெங்கட் பிரபு சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு 'எங்கே விட்டோமோ அங்கிருந்துதான் ஆரம்பிப்போம்' என்று கூறி ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைக்கும்.. காமெடி நடிகர் பேட்டி..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் என்னுடைய சிஎஸ்கே கட்சி கூட்டணி வைத்து 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிக்கும் என காமெடி நடிகர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.