அரசியல் கட்சி ஆரம்பிச்சாச்சு.. அடுத்தது இதுதான்.. விஜயகாந்த் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையா?

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அடுத்ததாக தனது பெயரில் டிவி சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்காக விஜயகாந்த் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சியினர் சொந்தமாக டிவி சேனலை வைத்திருக்கும் கலாச்சாரம் இருந்து வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய்யும் கட்சி ஆரம்பித்துள்ள உள்ள நிலையில், தளபதி டிவி என்ற பெயரில் ஒரு புதிய சேனல் தொடக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு புதிய சேனலை தொடங்க வேண்டுமென்றால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அவர் ஏற்கனவே செயல்பட்டு வரும் டிவியை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த வகையில் விஜயகாந்தின் கேப்டன் டிவியை அவர் விலைக்கு வாங்கி தளபதி டிவி என்று மாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து விஜயகாந்த் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. தளபதி டிவி ஆரம்பித்தவுடன் விஜய்யின் அரசியல் கட்சி குறித்த செய்திகள், அவர் நடத்தும் பொதுக்கூட்டங்கள், கட்சியின் கொள்கைகள் மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் தளபதி டிவியில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

ஜிம்முக்கு வொர்க்கவுட் செய்ய வந்தது போல தெரியலையே: ஷிவானி நாராயணன் வீடியோ..!

பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த கட்டேரா பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்..

ZEE5  தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான "கட்டேரா"  படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது

விஜய் மாதிரி நிறைய சம்பாதிக்கணும், அரசியலுக்கு வரணும்.. விஷால் குறித்து அப்பா ஜிகே ரெட்டியின் கனவு..!

விஜய், அஜித், சூர்யா மாதிரி தனது மகன் விஷால் நிறைய சம்பாதிக்க வேண்டும், சம்பாதித்த பணத்தை மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என்று விஷாலின் அப்பா ஜி கே ரெட்டி சமீபத்தில் அளித்த

அசோக்செல்வன் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்.. 'ஜெயிலர்' நடிகரும் இணைகிறாரா?

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பெண் இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தள்ளி போகும் 'தக்ஃலைப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. இடையில் என்ன செய்ய போகிறார் கமல்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு