அட்லி வீட்டிற்கு திடீர் விசிட் செய்த தளபதி விஜய்.. வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் அட்லீயின் வீட்டிற்கு திடீரென தளபதி விஜய் விசிட் செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி என்பதும் அவர் விஜய் நடித்த ’தெறி’ ,’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே, மேலும் தற்போது ஷாருக்கான், நயன்தாரா நடித்து வரும் ’ஜவான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்தாண்டு ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அட்லி - பிரியா திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அட்லிக்கும், அவருடைய மனைவியும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று ப்ரியா அட்லியின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் தளபதி விஜய் நேரடியாக சென்று கொண்டிருக்கும் தனது வாழ்த்துக்களை அட்லி-ப்ரியா தம்பதிக்கு தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
#ThalapathyVijay at Priya atlee’s Baby shower function! ❤️#Varisu @actorvijaypic.twitter.com/UNWzrFDJjY
— Actor Vijay FC (@ActorVijayFC) December 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com