நுழைவு வரியை முழுமையாக செலுத்திய விஜய்: எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்ததோடு அவர் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும் என்றும் மீதமுள்ள 80 சதவீதத் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது நுழைவு வழியாக ரூபாய் 40 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக வணிகவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் எட்டு லட்ச ரூபாயையும், அதன்பிறகு 32 லட்ச ரூபாய் என முழுமையாக நுழைவுவரியை விஜய் செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments