வேலைக்காரனை சந்தித்த வேலாயுதம் - காரணம் என்ன ?

  • IndiaGlitz, [Wednesday,January 17 2018]

கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்'. இந்த படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன், மோகன்ராஜா ஆகியோர்களின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இந்த படத்தை கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவரும் பாராட்டினர்

இந்த நிலையில் மோகன்ராஜாவை அவரது இயக்கத்தில் வெளியான 'வேலாயுதம்' படத்தில் நடித்த தளபதி விஜய் சமீபத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது 'வேலைக்காரன்' படத்தை விஜய் பாராட்டியதாகவும், இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியதாகவும் தெரிகிறது.

தளபதி விஜய் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். அதேபோல் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் முடிவடைந்த பின்னர் மீண்டும் 'வேலாயுதம்' கூட்டணி இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. ரசிகர்களது விருப்பத்தை இருவரும் நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரூ.100 கோடி மதிப்பில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது.

நடிகை தேவயானிக்கு ஏற்பட்ட மிகப்பேரிய இழப்பு

பிரபல நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 73.

25 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய முயற்சி

1992ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதே வருடத்தில் அவர் இசையமைத்த இன்னொரு படம் 'யோதா' என்ற மலையாள படம்.

நான் செல்லும் இடமெல்லாம் கோமியம் தெளிப்பீர்களா? பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த மேடை புனிதத்தன்மையை இழந்துவிட்டதாக கருதிய பாஜகவினர் அந்த மேடையை கோமியம் ஊற்றி கழுவியதாக தெரியவந்துள்ளது.

17 வருடங்களுக்கு பின் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் பிரபல நடிகர்

கடந்த 2001ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்குனராக அறிமுகமான படம் 'மின்னலே'. இதே படத்தில்தான் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் அறிமுகமானார்.