close
Choose your channels

தாயார் ஷோபாவை சந்தித்தாரா தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்!

Monday, January 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக பெற்றோரிடம் கருத்து வேறுபாடு உடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது தாயார் ஷோபாவை சந்தித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் அரசியலுக்கு வருவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் கூறியதை அடுத்து, விஜய் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பதும், அது முதல் விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் சில ஆண்டுகள் பேசிக் கொள்வது கூட இல்லை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் விஜய் கடந்த சில ஆண்டுகளாக பெற்றோரையே சந்திக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது தாயார் ஷோபாவை சந்தித்த புகைப்படம்இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. விஜய்யின் லேட்டஸ்ட் கெட்டப்புடன் தாயார் ஷோபாவுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருவதை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment