சிங்கத்தின் கர்ஜனை.. கையில் தீப்பந்தம்.. 'லியோ' ஐமேக்ஸ் போஸ்டர் வேற லெவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர்களே அதிகாரப்பூர்வமாக ஐமேக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது மட்டுமின்றி புதிய போஸ்டர் ஒன்று வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘லியோ’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போஸ்டரில் சிங்கத்தின் கர்ஜனை, விஜய்யின் கைகளில் உள்ள தீப்பந்தம் ஆகியவை தாறுமாறாக உள்ளது. ஐமேக்ஸ் போஸ்டர் தரமான சம்பவமாக இருக்கும் நிலையில் படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழில் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’பொன்னின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் ‘லியோ’ திரைப்படம் மூன்றாவது ஐமேக்ஸ் தொழில்நுட்ப திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ’தலைவர் 171’ திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமிராவில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக லோகேஷ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Get ready for an explosive cinematic blast, there’s no holding back 💣
— Seven Screen Studio (@7screenstudio) October 12, 2023
We're taking your cinematic experience to new heights by bringing #Leo (Tamil) to #IMAX 🔥@IMAX #IMAXIndia#LeoInIMAX #LeoFromOctober19#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers… pic.twitter.com/cgkjzkudtf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com