'தளபதி 66' பூஜையுடன் படப்பிடிப்பும் தொடக்கம்: மாஸ் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,April 06 2022]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது என்பதும் இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் பூஜை மட்டுமின்றி இன்று இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு இன்று நடந்ததாக வைரலாகி வரும் புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தற்போது புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது. மேலும் நடிகை ராதிகா சரத்குமார் இதுகுறித்து தனது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். சரத்குமார் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.