கணவர், குழந்தையுடன் விஜய்யின் 'யூத்' பட நடிகை: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

தளபதி விஜய் நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தின் நாயகி சாஹின்கான் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கிய திரைப்படம் ‘யூத்’. இந்த திரைப்படத்தில் நாயகியாக சாஹின்கான் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் 2000ஆம் ஆண்டு வெளியான ’சிருநவுட்டோ’ என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பதும் தெலுங்கிலும் சாஹின் கான் தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழில் ‘யூத்’ தவிர ‘ஈர நிலா’ என்ற படத்தில் மட்டும் நடித்த சாஹின்கான், அதன் பின்னர் தக்வின் ஹாசம்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கணவருடன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்ட சாஹின்கான் அதன்பின் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கணவர், குழந்தை என குடும்பத்தை கவனித்து வரும் சாஹின்கான், கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.