'தளபதி விஜய்யின் வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் கதாநாயகனாக அறிமுகமான ’நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆகியதை அடுத்து தளபதி விஜய்யின் 29 ஆண்டுகள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் இன்று காலையிலிருந்து இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் தளபதி விஜய்யின் 21 ஆண்டு கால திரையுலக வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை ரசிகர்கள் காணாத விஜய்யின் வேற லெவல் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தயாரிப்பாளர் ஜெகதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 29 வருடங்கள் உங்களுடைய பயணத்தில் நீங்கள் காட்டிய அர்ப்பணிப்பும், தொழில் நேர்த்தியும் உண்மையிலேயே எங்களை போன்றவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. நான் உங்களிடம் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள் என்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்றும் விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
29 years of a remarkable journey yet the kind of dedication and professionalism you display is truly inspiring. Every moment I spend with you is a learning process. Wishing you lot more success and happiness in the years to come @actorvijay na ??♥️#29YrsOfVIJAYSupremacy pic.twitter.com/f6hMWNxoZS
— Jagadish (@Jagadishbliss) December 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com