அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடு: 'வாரிசு' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலரை விஜய்யின் ரசிகர்கள் கோடிக்கணக்கானோர் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ’வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் என ஒட்டுமொத்த ஜனரஞ்சக கலவையாக இருக்கும் நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமனின் இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என டிரைலரை பார்க்கும்போது இருக்கிறது. மொத்தத்தில் ’வாரிசு’ படத்தின் டிரைலர் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது என்பது தெரியவருகிறது. இந்த டிரைலரில் உள்ள சில பஞ்ச் வசனங்கள் இதோ:
‘அம்மா எல்லா இடமும் நம்ம இடம் தான்’
’நல்ல வேட்டைக்காரனுக்கு கண்ணுல முள்ளு விழுந்தாலும் கண்ணு திறந்தே தான் இருக்கணும்
பவர் சீட்ல இருக்காது சார், அதுல வந்து ஒருத்தன் உட்காருவான்ல்ல, அவன்கிட்ட தான் இருக்கும், நம்ம பவர் அந்த ரகம்’
அன்போ, அடியோ எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடு, நீ எது கொடுத்தாலும் நான் ட்ரிபிளா திருப்பி கொடுப்பேன்
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments