'வாரிசு' தெலுங்கு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு.. 2 முக்கிய காரணங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் இரு மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழில் ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் தெலுங்கில் ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2 முக்கிய காரணங்கள் என்னவெனில் தெலுங்கில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஜனவரி 12, மற்றும் 13ஆம் தேதி ரிலீஸ் ஆவதுதான்.
ஜனவரி 12-ஆம் தேதி என்டிஆர் பாலகிருஷ்ணா நடித்த ’வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ஜனவரி 13-ஆம் தேதி சிரஞ்சீவி நடித்த ’வால்டர் வீரய்யா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. எனவே தியேட்டர் பற்றாக்குறை காரணமாக ஜனவரி 14ஆம் தேதி ’வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
#Vaarasudu will arrive in theaters on January14th
— Sri Venkateswara Creations (@SVC_official) January 9, 2023
Celebrate Sankranthi in theaters with your family#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @karthikpalanidp @Cinemainmygenes @ramjowrites @rgvhari @ahishor @scolourpencils @vaishnavi141081 @Yugandhart_ @PVPCinema pic.twitter.com/wIfOQ6tOLe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments