தளபதி விஜய்யின் 'வாரிசு' ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவான ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் ‘வாரிசு’ திரைப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்யக் கூடிய பணிகளை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதை அடுத்து பெரும்பாலான தியேட்டர்கள் புக் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது. அதேபோல் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ரிலிஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தியேட்டர்களை புக் செய்யும் பணிகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய், அஜித் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் எந்தெந்த படத்திற்கு எவ்வளவு தியேட்டர் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Let the festival begin ????
— Seven Screen Studio (@7screenstudio) November 20, 2022
Happy to be associated with #Varisu for Tamil Nadu theatrical release! ??
Thanks to #Thalapathy @actorvijay
Sir, Dil Raju Sir, @SVC_official @directorvamshi @Jagadishbliss #VarisuPongal https://t.co/ToPtqZHOhj
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com